நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய்,
கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில்
வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ‘ மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காதே, மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்காஇ எமக்கு நீதி வேண்டும், உள்ளிட்ட கோஷங்களை எழுப்பில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்களினால்
மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜரொன்றும்
கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது

