காரைதீவு கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை
அகற்றமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான காரைதீவு மாளிகைக்காடு
உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள்
அதிகளவாகக் காணப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கழிவு பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடி தொழிலுக்கு
பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி வருவதாவும்
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்
எனவும் பாதிக்கப்பட்டமீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

