மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குளிர்ந்த லாவா குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது
சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின்
மிகவும் தீவிரமான உயிர்ப்பு எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலையில் இருந்து
பாறைகள் உருண்டு சுமத்ரா தீவில் இரண்டு மாவட்டங்களுக்குள் வீழ்ந்துள்ளன.
இதேவேளை வீதிகள்இ வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
‘நேற்று இரவு நிலவரப்படிஇ 37 பேர் உயிரிழந்ததாக நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால் இன்று காலை அந்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாகவும் 17 பேர்
காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

