காதல் ஜோடியான ஜி.வி மற்றும் சைந்தவி ஆகியோர் நேற்றைய தினம்
நாங்கள் பிரிந்து விட்டோம் என உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
11 வருட காதல் நிறைவுக்கு வந்துள்ளது. ஆழ்ந்த யோசனைக்கு பின்னர்
நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களின் மன அமைதிக்காக
இந்த முடிவை எடுத்துள்ளளோம்.
எங்களுடைய நன்மைக்காகவும்இ அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும்
பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது
எங்களுடைய தனியுரிமையை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும்
முக்கியம். நன்றி’ இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

