மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டுள்ள நிலையில்இ படுகாயமடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக
உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமரான 59 வயதான ராபர்ட் ஃபிக்கோ மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் ப்ராகுக்கு 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹாண்ட்லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ உரையாற்றிக் கொண்டிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அவரை நோக்கி ஒருவர் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் இதில்
ஃபிக்கோவின் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததாகவும் அந்நாட்டுச் செய்திகள்
தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, படுகாயமடைந்த அந்நாட்டு பிரதமர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காக பானஸ்க் பிஸ்ட்ரிகா பகுதியில் உள்ள வைத்திசாலைக்கு
ஹெலிகாப்டர் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று அந்தப் பதிவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

