Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி,  மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments