Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும்

கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும்

அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பருவமழைக்கு முந்தைய காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும்
காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,
நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன் நாட்டின் ஊடாக அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments