நேற்று மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம்
ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜேஃ21 கிராம சேவகர் பிரிவில் உள்ள
ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளதாகவும் இருப்பினும் உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

