Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுல்லைத்தீவிலிருந்து யாழிற்கு போதைப்பொருள் கடத்தல்

முல்லைத்தீவிலிருந்து யாழிற்கு போதைப்பொருள் கடத்தல்

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞரொருவர் புலனாய்வு பிரிவினரால் யாழில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருளுடன் இளைஞரை கைது செய்துள்ளனர்.

முல்லைதீவு மாவட்டத்தின் விஸ்வமடுப் பகுதியிலிருந்து பஸ் மூலம் ஸ்பிறிற் எனும் போதைப்பொருளை கடத்த முற்பட்ட பொழுது யாழ் நகரில் வைத்து குறித்த இளைஞரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை மேலதிக விசாரணைக்காக குறித்த சந்தேக நபரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments