Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதப்பியோடிய களுத்துறை சிறைச்சாலை கைதி

தப்பியோடிய களுத்துறை சிறைச்சாலை கைதி

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்
நேற்று பிற்பகல் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹொரணை,  இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ களுத்துறை சிறைச்சாலையினுள் உள்ள கட்டிடமொன்றைச் சுத்தம்
செய்துகொண்டிருக்கும் போது இவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறைச்சாலைக்குப்
பின்புறத்தில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments