Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைசாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

மலையகத்தில் பல பகுதிகளில் அதிக பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் ,  பங்களாஹத்த ,  நானுஓயா இ ரதல்ல குறுக்கு வீதிஇ அதேபோன்று நுவரெலியா – கண்டி வீதியில் பம்பரக்கலைஇ
டொப்பாஸ்இ குடாஓயாஇலபுக்கலைஇ கொண்டக்கலை பாதை நுவரெலியா -உடபுசல்லாவ வீதியில்
ஆவேலியாஇ பொரலந்தஇ கந்தப்பளைஇ இராகலை பாதை இ நுவரெலியா -பதுளை- வீதியில் தர்மபால சந்திஇ
மாகாஸ்தோட்டஇகட்டுமானஇ சீத்தாஎலியஇ ஹக்கலை மற்றும் பொரகாஸ் உட்பட அம்பேவலஇமீப்பிலிமான இ
பட்டிபொல மற்றும் உலக முடிவு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம்
காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும்இ
வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது .

தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகிறது. குறிப்பாக சனி மற்றும்
ஞாயிறு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள்
நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர்.

எனவேஇ குறித்த சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால்
விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும்
எனவும்இ வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை
ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments