Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கு.சுரேந்திரன் தெரிவு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கு.சுரேந்திரன் தெரிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக
குமாரசாமி சுரேந்திரன் செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலமையில் இடம்பெற்ற
நிகழ்வில்,  இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவிசாளருக்காக கு.சுரேந்திரன்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தம்பையா சிவராசா ஆகியோர்
முன்மொழியப்பட்டனர்.

இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கு. சுரேந்திரன் 13 வாக்குகளைப் பெற்று
தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட த.சிவராசா 12
வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தனர். இதில் 7 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் சி.வி.கே சிவஞானம்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி
பேச்சாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் கட்சி பிரமுகர் என பலரும்
கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments