Wednesday, August 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி

திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு
வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு
செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று நேரம் ஒதுக்க
மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா,  பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக
இதனை தெரிவித்தார்

சபையில்,  எதிர்க்கட்சி சார்பில் 5 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதன்போதுஇ ஜனாதிபதி சபைக்கு வந்த நிலையில்.,  இன்று நாங்கள் மாத்திரமே
உள்ளோம் என சாணக்கியன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments