Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் துண்டு பிரசுரம் விநியோகம்

யாழில் துண்டு பிரசுரம் விநியோகம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாலை துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு
உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை
பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,  கட்சியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்,  கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments