Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படிஇ 12.5,  கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 3, 680 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 1, 477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது

இதன்படி,  12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில்,  அதன் புதிய விலை 3, 790 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,  அதன் புதிய விலை 1, 525 ரூபாவாகும். 2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்இ அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments