Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை15 தீவிரவாத அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம்

15 தீவிரவாத அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம்

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின்
நிதிகள் சொத்துக்கள் முடக்கம் இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை
வெளியிட்டுள்ளார்.

15 தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments