தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியென 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இம்முறைஇ தி.மு.க. எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டார்.
அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன் , நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் தூத்துக்குடியில் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் -2,44,034 வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி -67, 522 வாக்குகளும்இ பா.ஜ.க. கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன்- 47, 094 வாக்குகளும் பெற்றுள்ளனர்

