Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்பாங்கொக்கில் தீ விபத்து; 1000 பிராணிகள் உயிரிழப்பு

பாங்கொக்கில் தீ விபத்து; 1000 பிராணிகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள சட்டுசாக் என்ற பிராணிகள் விற்கும்
சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1000 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான சட்டுசாக்கில் இன்று அதிகாலை குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்தில் 100 கடைகள் சேதமடைந்துள்ளதாகவும்இ சுமார் 1000 பிராணிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பிராணிகளில் நாய்கள், பூனைகள், பாம்புகள் மற்றும் பறவைகள் உள்ளிட்டவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாகவே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தையைப் பார்வையிட வார இறுதி நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments