பிரித்தானிய வரலாற்றில் புதிய சரித்திரம் படைப்பதற்கு ஒரு வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற தேர்தலில் தமிழ் பெண்கள் கிருஷ்ணி ருஷிகரன், உமா குமரன் ஆகிய இருவரும் தொழில் கட்சி(Labour Party) சார்பில் போட்டிyidukiraarkal
அதிலும் இருவரும் ஈழத்தமிழ் பூர்விகத்தைக் கொண்டவர்கள் என்பது ஈழத்தமிழ் களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பின்னணியில் (Tamils for Labour) தொழில் கட்சிக்கு ஆதரவான தமிழர்களின் அமைப்பு உட்பட பெருமளவான தமிழ் மக்கள், தொழில் கட்சிக்கும் கிருஷ்ணி ருஷிகரனுக்கும், உமா குமரனுக்கும் தமது ஆதரவுகளை வழங்க தயாராக உள்ளனர்.
ஜூலை 4ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிபெறும் பட்சத்தில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவோம் என்று தொழிலாளர்களுக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா தெரிவித்திருக்கிறார்.

தொழில்கட்சி அரசாங்கத்தின் அரச நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடமாக தமிழர்களுக்கு நீதி தேடும் விவகாரம் இருக்கும் என்பது தொழில்கட்சியின் வாக்குறுதி.
அது மட்டுமின்றி தொழில் கட்சி தொடர்ந்தும் தமிழர்களுக்கு ஆதரவாக பயணிக்கும் என்பதும் அவர்களின் உறுதி.
இதன் காரணமாக இவர்கள் இருவரும் வெற்றிபெறுவதன் மூலம் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு பிரித்தானியாவில் முக்கிய இடத்துக்கு வரும் என்பது எதிர்பார்ப்பு.



