Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாளை மூக்குத்தி பூ திரைப்படம் மன்னாரில் வெளியீடு

நாளை மூக்குத்தி பூ திரைப்படம் மன்னாரில் வெளியீடு

வடமாகாண கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டு விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ள மூக்குத்தி பூ திரைப்படம் இம் மாதம் 30 திகதி நாளை மன்னார் சன் சினிமா திரையரங்கில் வெளியாகவுள்ளது

யாழ்பாணம் மன்னார் வவுனியா இளைஞர் யுவதிகளின் நடிப்பில் இயக்குனர் ஈழவானியின் இயக்கத்தில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் ரெஜி செல்வராசாவின் ஒளிப்பதிவில் அலெக்ஸ் கோபியின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இரு இளைஞர்கள்
முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தில் இருந்து ஒரு பெண் தயாரிப்பாளரினால் முழு நேர திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் குறித்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் எதிர்வரும் 30 திகதி மாலை 4 மணிக்கு மன்னார் சன் திரையரங்கில் பிரமாண்டமாக குறித்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஈழத்து சினிமா வளர்சியில் அக்கறை கொண்டவர்கள் வருகை தந்து ஆதரவை வழங்குமாறு பட குழு கோரிக்கை விடுத்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments