Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசம்பந்தனின் மறைவு: ஜனநாயக போராளிகள் இரங்கல்

சம்பந்தனின் மறைவு: ஜனநாயக போராளிகள் இரங்கல்

தமிழரசு கட்சியின் தலைவரான இரா.சம்பந்தனின் மறைவானது தமிழினத்திற்கு
பெரும் பின்னடைவுகளை உருவாக்கும் என ஜனநாயக போராளிகள் கட்சியினரால்
வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இரா.சம்பந்தர் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை நிரப்பிக்கொள்ள வேண்டிய காலக்கடமை தளத்தில் செயலாற்றுகின்ற அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.

அனைவரும் ஓரணியில் திரளாக ஒன்றுபடுவதே நாம் இரா.சம்பந்தரின் ஆன்மாவிற்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும். இலங்கை இந்திய உடன்படிக்கையில் வடகிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் காத்திரமாக இந்திய பிரதமருக்கு வலியுறுத்தி அவ்விடயத்தினை ஒப்பந்ததில் இடம்பெற செய்த வரலாற்று கடமையினை ஆற்றியவர் இரா.சம்பந்தரே ஆவார்.

இலங்கை-இந்திய உடன்படிக்கைக்கு அமைய கோரப்பட்ட இடைக்கால நிர்வாகத்திற்கு கூட்டணி சார்பில் இரா.சம்பந்தரே பிரேரிக்கப்பட்டவராவார்.

2004 தமிழினத்தின் ஜனநாயக ஒற்றுமையினை கருதில்கொண்டு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைத்து ஜனநாயக அரசியல் பலத்தினை மக்கள் ஆணைக்காக கொண்டு செல்லும் செயற்பாடுகளில் தலைமையாக இரா.சம்பந்தர் சிறப்பாக செயலாற்றினார் என்பதனை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

2009 போர் மௌனித்துபோனதின் பின்னரான தமிழ் அரசியல் பரப்பில் 2015 இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகியமை அவரின் இராஜதந்திர நகர்வின் உச்சமாகவே கருதப்படுகிறது.

அந்தவகையில்இ இனத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பு பணிகள் சர்வதேச நாடுகளின் உடனான பேச்சுக்கள் குறிப்பாக இந்திய தரப்புக்களுடனான நகர்வுகளில் இரா.சம்பந்தர் ஆற்றிய பணிகள் என்றும் தமிழினத்தால் நினைவில் கொள்ளத்தக்கது.

இந்த நிலைமைகளில் இரா.சம்பந்தரின் மறைவு பெரும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை தமிழ் தேசிய பரப்பில் உண்டாக்கி உள்ளதென்பதே உண்மையாகும்.

தமிழினம் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுமின்றி சமூகஇ பொருளாதார அரசில் பலம் சிதைவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு திக்கற்ற நிலையில் தமிழினத்தின் தற்போதைய நிலையில் இரா.சம்பந்தரது இழப்பு பேரிழப்பாகும். அதன் தாக்கமானது எதிர்கால தாயக பிராந்திய சர்வதேச அரசியல் விவகாரங்களை கையாளுகின்றபோது தமிழினத்திற்கு பெரும் பின்னடைவுகளை உருவாக்கும்.

நிலைமைகளை கருத்தில்கொண்டு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றினைவதே இரா.சம்மந்தருக்கு நாம் ஆற்றுகின்ற அஞ்சலியாகும். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எமது மக்களின் சார்பிலும் போராளிகள் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கின்றோம் என
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments