Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை

யாழில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – வடவராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று அதிகாலையிலிருந்து மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மருதங்கேணி போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் குறிப்பாக வாள் வெட்டில் ஈடுபடுதல்,  மக்களை மிரட்டுதல்,  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போலீஸ் மற்றும் இராணுவத்தினர் 40 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளாக நடவடிக்கைக்கு முற்படுத்தப்படவுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments