Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாமன்னிப்புக் கேட்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம்

மன்னிப்புக் கேட்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம்

தங்கள் தவறால் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு உள்துறை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில்,  உங்கள் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  உங்களுக்கு அகதி நிலையும்,  ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல,  ஒரு ஈரானிய தம்பதிக்கு புலம்பெயர்தல் அமைப்பு ஒன்றிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அழைத்தவர்,  பிரித்தானியாவில் வாழ உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண்ணுக்கு. உள்துறை அலுவலகத்திலிருந்து,  அவருக்கு பிரித்தானியாவில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறவே,  அவர் தங்கவைக்கப்பட்டிருந்த ஹொட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவருமேஇ பிரித்தானியாவில் வாழ தங்களுக்கு அனுமதி கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் இரண்டாவது தகவல் வந்துள்ளது.

அதில் துரதிர்ஷ்டவசமாக,  எங்கள் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,  பிரித்தானியாவில் வாழ உங்களுக்கு தவறுதலாக அனுமதியளிக்கப்பட்டுவிட்டது என அந்த செய்தி கூறவே,  மகிழ்ச்சியில் இருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்நிலையில்இ இப்படி தொடர்ந்து குளறுபடிகளை ஏற்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை மன அழுத்தத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கிய பிரித்தானிய உள்துறை அலுவலகம்இ தங்களால் ஏற்பட்ட சிரமத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments