Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ள நிலையில்,  ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் புளெட் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இ தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா ,  ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும்
துளசி ஆகியோர் பங்காளி கட்சிகள் சார்பில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments