Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇளைஞர் மீது யாழில் வாள்வெட்டு

இளைஞர் மீது யாழில் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து குறித்த இளைஞன் நேற்று மாலை தனது காதலியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞன் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியில் கைவிட்டுஇ சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த பகுதி மக்களால் இளைஞர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments