Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகரின் கார் தீயில் எரிந்து நாசம்

ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகரின் கார் தீயில் எரிந்து நாசம்

பெலியத்த குடாஹில்ல ஜய மாவத்தையில் ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் கார் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அதிகாரியின் வீட்டின் கெரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில்இ காருக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments