வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை
பிறந்து இறந்துள்ளதாக, குழந்தையின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விடயத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காமல் சிசுவின் சடலத்தை பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் குறித்த தந்தை தெரிவித்துள்ளார்.
பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையில் பெண் ஒருவர்
சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டதையடுத்துஇ குறித்த பெண் தாதியொருவருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போதுஇ அங்கு நேரத்தில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு, இதுதொடர்பாக கவனமெடுக்காமல் இருந்துள்ளார் எனவும் இதனாலேயே குழந்தை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தந்தை, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

