யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக
மனைவியை கணவன் தீயிட்டு எரித்த நிலையில்இ மனைவி யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண்ணே எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம்பெற்றுவந்துள்ளது.
இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

