Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தானியாவின் பரபரப்பான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்

பிரித்தானியாவின் பரபரப்பான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்

பிரித்தானியாவில் பரபரப்பான சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாலையில் விழுந்த விமானம் பிரித்தானியாவின் Gloucestershire பகுதியில்
இலகுரக விமானம் ஒன்று பரபரப்பான சாலை ஒன்றில் தரையிறங்கி விபத்துக்குள்ளானதல் முக்கிய சாலைகள் பல மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Frampton Mansell  பகுதியில் உள்ள Aston Down   விமான நிலையத்திற்கு
அருகிலுள்ள a419 ஸ்ட்ரௌட் சாலையில் கிளைடர் விமானம்
திடீரென தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த இரண்டு பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Cowcombe Hill மற்றும்  Emmerson Lane ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட A419 சாலைகள்இருபுறமும் அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து குறித்து அறிந்து இருப்பதாக  Cotswold Gliding Club  தெரிவித்து இருப்பதுடன் வான் விபத்து விசாரணை அமைப்பு இதில் இறங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments