Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில்இ பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு வீட்டின் மேல் கூரை சரிந்து வீழ்ந்ததில் 3 பெண்கள்,  6 குழந்தைகள்,  3 ஆண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாரணையில்இ இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,  அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments