Monday, August 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமூதூரில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மூதூரில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் -அல்லைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவரை மூதூர் பொலிஸார் இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது ஐஸ் 6 கிராம் 50 மில்லி கிராமும்இகஞ்சா 5 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவர வின் ஆலோசனையின் பேரில்
உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ் சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments