Friday, September 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதியால் புதிய இராஜாங்க அமைச்சர் நியமிப்பு

ஜனாதிபதியால் புதிய இராஜாங்க அமைச்சர் நியமிப்பு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றார்.

நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க,  ஷஷீந்திர ராஜபக்ஷ,  அமித் தேனுக விதானகமகே,  பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் உடன் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன்போதுஇ அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் உள்ள ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments