Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாமூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை,  மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மழைப் பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை,  உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படிஇ வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில்,  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 30 கால்நடைகள் பலியான நிலையில்,  பாதிக்கப்பட்ட 30 பேருக்கும்,  3, 056 வீடுகள் சேதமடைந்தது தொடர்பாகவும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என உத்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம்
தமது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments