Wednesday, September 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகீரிமலையிலிருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

கீரிமலையிலிருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

பருத்தித்துறை இ.போ.ச சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நாளை முதல் இடம்பெறவுள்ளது.

கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை,  மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பிற்பகல் 7:15 மணிக்கு கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை,  தொண்டமனாறு,  வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறையை வந்தடைந்து,  பருத்தித்துறையிலிருந்து மந்திகை மாலிசந்தி, நெல்லியடி,  துன்னாலை ஊடாக வவுனியா அனுராதபுரம்,
புத்தளம்,  சிலாபம் வழியாக கொழும்பை சென்றடையவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  பருத்தித்துறையிலிருந்து அம்பன் மருதங்கேணி ஒதுக்காது ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவைகள் நடாத்தப்பட்டிருந்தது.

அச்சேவைகள் ஏன் இடை நிறுத்தப்பட்டிருந்ததுஇ எப்போது மீள ஆரம்பிக்கப்படும் என சாலை முகாமையாளரை கேட்டபோது,  சாரதி,  மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக அச் சேவைகள் தொடர முடியாதுள்ளதாக தெரிவித்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments