Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉதய கம்மன்பில தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

உதய கம்மன்பில தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

அவுஸ்திரேலியருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

அப்போதுஇ ​​பிரதிவாதி உதய கம்மன்பில நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன்இ மற்றைய பிரதிவாதியான சிட்னி ஜயரத்ன உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்

அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம்,  இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை நவம்பர் 25 ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது.

இதேவேளை 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments