Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழப்பு

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழப்பு

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹத்தொட்ட அமுன பகுதியில் உள்ள சுரங்கமொன்றில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹத்தொட்ட அமுன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உட்பட மேலும் நால்வர் தனியார் காணி ஒன்றில் இரத்தினக்கல் அகழ்வு மேற்கொண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments