Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் மரணம்

குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு
இலக்கான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நவரத்தினம் கேதீஸ்வரன் என்ற
இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த இளைஞன் தனது வாகனத்தில் நித்திரையில் இருந்தபோது குளவி கொட்டியுள்ளது.

வலி தாங்கமுடியாமல் யாழ். போதனா வைத்தியசாலையில் இளைஞன் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல்கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments