Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை தமிழர் கனடாவில் கொலை

இலங்கை தமிழர் கனடாவில் கொலை

கனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான குறித்த நபர் தமது தந்தையை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவரின் மனைவி அயலவர்களின் உதவியைக் கோரியதை அடுத்து அயலவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என
தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments