Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 7010 பேர் பாதிப்பு

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 7010 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த
7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்
ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும்,  யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேரும்,
ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேரும்,
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும்,
காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும்,
கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும்,
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும்,
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments