Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவிடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவ முன்வாருங்கள்

பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன சீரற்ற காலநிலை தொடரும் பட்சத்தில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு நலன்விரும்பிகள் உதவ முன்வருமாறு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் கோரிக்கை விடுத்தார்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

அண்மைய சில நாட்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்திலே காணப்டுகின்ற சீரற்ற காலநிலை என்பது எங்களுடைய தமிழ் தேச உறவுகளை அனரத்தரீதியான பாதிப்புகளுக்கு உருவாக்கியுள்ளது.

அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளாமானவர்கள் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.27, 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த பரீட்சைகள் யாவும் கலைப்பீடாதிபயினால்
பிற்போடபட்டுள்ளது. அவ்வளவு தூரம் மழையின் நிலை காணப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் போதிய விடுதி வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்கலைக்கழக சூழலை அண்டிய பகுதிகளில் வாடகை கொடுத்து விடுதிகளில் தங்கி வருகின்றார்கள் அவ்வாறு தங்கி வருகின்ற விடுதிகள் யாவும் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது.

வெள்ளம் காரணமாக பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எம்மால் இயன்றளவு உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த அனர்த்தம் மிகுந்த வேதைனையை வழங்கியுள்ளது. இந்த சவாலில் இருந்து நாங்கள் மீண்டு வந்து கொண்டுள்ளோம் . எங்களுடைய கலைப்பீட மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் 1020 மாணவர்களுக்கு உணவினை வழங்கி வழங்கியுள்ளோம். காலை வேளை உணவுகளையும் வழங்கி வருகின்றோ மாணவர்களுக்கு திடீர் அனரத்த்தின் பொழுது விரிவுரையாளர்கள் பீடாதிபதிகள் உதவியாக உள்ளனர். உயர்தர பரீட்சை பிற்ளனபோடபட்டுள்ள நிலையில் கல்வி பொருளாதார வாழ்வியல்ரீதியில் நாம் பிற்போடபட்டுள்ளோம்.

மழை தொடரும் பட்சத்தில் எமது மாணவர்களுக்கு புலத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் உள்ள நபர்கள் பொருளுதவி நிதியுதவியையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments