Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅம்புலன்ஸ் வண்டியும் அரச பேருந்தும் மோதி விபத்து

அம்புலன்ஸ் வண்டியும் அரச பேருந்தும் மோதி விபத்து

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில்
ஆம்புலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும் மோதி
விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இன்று
இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியானது,  கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துசபை பஸ் மீது மோதியுள்ளது.

இதன்போது அம்பியுலன்ஸ் வண்டி சாரதியும், அதில் பயணித்த பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்இ களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான இந்த வாகனம்,
களுவாஞ்சிகுடி பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றபோதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக பஸில் பயணித்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments