Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாவகச்சேரி நகரசபை முன் பதற்றம்

சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம்

யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி
நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சாவகச்சேரி நகர சபையால் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு
வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.

இதனால் சந்தைத் தொகுதியில் நிரந்திரமாக கடை நடத்தி 2000 ஆம் ஆண்டு யுத்தத்தினால் கடைகள் அழிவடைந்ததினால் வியாபாரம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

அந்த வர்த்தகர்களுக்கு சந்தைத் தொகுதியில் புதிய கடைகள் கட்டப்படுகின்ற வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் வழங்கப்படும் என நகராட்சி மன்றத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிராகவும்,
விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனவும் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி
போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர். இதனால் நுழைவாயிலில் அமர்ந்து இருந்தவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது நகராட்சி மன்ற வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி,  கழிவகற்றும்
உழவியந்திரத்தை போராடியவர்கள் மீது மோத முயற்சித்ததோடு,  அதை வீடியோ
எடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார்.
இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

குறித்த கேள்வி கோரலை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி பிரதான நுழைவாயிலை மறித்து போராடிய நிலையில் போராட்டத்தினை தலைமை தாங்கிய முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த கேள்வி கோரலால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவதால்,  உள்ளூராட்சி வடமாகாண ஆணையாளருடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வரை குறித்த கோரப்பட்ட கேள்வி அறிவித்தல் பத்திரங்களை உரிய தினத்தில் திறப்பதினைத் தவிர்த்து,  அவற்றினை உறை நிலையில் வைக்குமாறு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரினால் நகரசபை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கையளிக்கப்பட்ட
நிலையில் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments