Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும்,  பரிசளிப்பும் நிகழ்வும் பிறீடம் பாலர் பாடசாலையின் அதிபர் சட்.எம்.நஸ்ஹான் தலைமையில் மாவடிப்பள்ளி கமுஃகமுஃஅல்-அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் இன்று நடைபெற்றது.

பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா செயளாலர் எஸ்.இம்தியாஸ்.கலந்து சிறப்பித்ததோடு. கௌரவ அதிதிகளாக எம்.எச்.எம்.சறூக் -பல் அறுவை சிகிச்சை நிபுணர் -அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கல்முனை மற்றும் கமுஃகமுஃஅல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன்,  ஜ.எல்.எம். அனிஸ்-வெளிக்கள உத்தியோகத்தர்இ ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஜ.எம்.சைபூதின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் தலைமைத்துவம், மூத்தவர்களுக்கு மதிப்பளித்தல்,  பெற்றோர்கள் கட்டளைகளுக்கு ஏற்ப சிறுவர்கள் செயல்படுதல், கிரகித்தல் , மற்றும் மாதிரி தலைமைத்துவ தலைவர்கள் உருவாக்குதல்இநல்லொழுக்கம் உள்ள பிள்ளைகளாக சமூகத்தில் உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் அதிதிகளால் பேசபட்டதோடு. தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,  பரிசில்கள்,  நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments