Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை : அம்பலமான தகவல்

அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை : அம்பலமான தகவல்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பான உண்மையான நிலையை அறிந்துகொள்ள தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரி இருந்தது அதற்கான பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பின் விளக்கம்

1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க
400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க
SHDP (இரண்டாவது) என்கின்ற 5 ஆண்டு திட்டத்தில் தான் கட்டுமான வேலைகள்
நடைபெற்றது. அதனால் இதற்கு என்று தனி திட்டம்  போடப்படவில்லை,  இதற்கான கட்டுமான வேலைகள் யாவும் கட்டிடங்கள் திணைக்களம் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.

3. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க
கீழ்வரும் முறையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு – 15மில்லியன்

2016ஆம் ஆண்டு – 41.49மில்லியன்

2017ஆம் ஆண்டு – 35.38மில்லியன்

2018ஆம் ஆண்டு – 26மில்லியன்

2020ஆம் ஆண்டு – 2.00மில்லியன்

2021ஆம் ஆண்டு – 2.56மில்லியன்

2021ஆம் ஆண்டு – 4.93மில்லியன்

2022ஆம் ஆண்டு – 3.96மில்லியன்

2022ஆம் ஆண்டு – 0.43மில்லியன்

2023ஆம் ஆண்டு – 3.56மில்லியன்

2023ஆம் ஆண்டு – 16.91மில்லியன்

2023ஆம் ஆண்டு – 2.654மில்லியன்

2023ஆம் ஆண்டு – 6.69மில்லியன்

2024ஆம் ஆண்டு – 12.00மில்லியன்

2024ஆம் ஆண்டு – 25.20மில்லியன்

2024ஆம் ஆண்டு – 3.59மில்லியன்

இந்தநிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதில் 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அரச தகவல் ஊடாக நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே மருத்துவர் அருச்சுனா கூறி இருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு உண்மை உள்ளது
என்றால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் முன்வைக்க வேண்டும் என்று பசுந்தேசம் அமைப்பு பகிரங்கமாக கோரிக்கை முன்வைக்கின்றதாகவும் கூறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments