Saturday, September 26, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாலண்டன் வீதி விபத்தில் 16 வயது இலங்கை மாணவி உயிரிழப்பு

லண்டன் வீதி விபத்தில் 16 வயது இலங்கை மாணவி உயிரிழப்பு

பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற விசாட வீதி விபத்தில் 16 வயதுடைய
இலங்கை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மெலீஷா பிரேமரத்ன என்ற அம்மாணவிஇ தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம்
தரத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் அவர் வழக்கம்போல் பாடசாலைக்கு நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில்,  பலத்த காயமடைந்த
மெலீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 68 வயதுடைய காரின் சாரதி, பின்னர்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments