Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி செயற்றிட்டங்கள்: எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி செயற்றிட்டங்கள்: எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு,  குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க விடுத்துள்ளார்.

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றையதினம்(03) பிற்பகல் 2 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள்இ திண்மக் கழிவு அகற்றுதலில் உள்ள சிக்கல்கள்,  காற்றாலை மின்சார திட்டம்,  மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காற்றாலை திட்டத்தினை விளக்குவதற்கு அத்திட்டத்தின் முகாமையாளர் முயன்ற போது கிராம மட்ட பிரதிநிதிகள்இபொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் போது காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மக்கள் விரும்பாத ஒரு செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது .

எனவே இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கை தொடருமாயின் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே அதை நிறுத்துவது சிறந்தது. மேலும் எதிர் வருகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடையங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments