Tuesday, October 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்த அறைகூவல்

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்த அறைகூவல்

போதை ஒழிப்பு விவகாரத்தில் பதவியை துச்சமென துறந்த யாழ்ப்பாணப் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினதும் போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னாலும் ஓட்டுமொத்த தமிழ் சமூகமும் அணிதிரள வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

இன்று தமிழர் தாய்நிலத்தில், யாழ் பல்கலைக்கழக சமூகத்தில் தோன்றியுள்ள மிகப்பாரதூரமான விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழ் அமைப்புக்களும் தலைவர்களும் கற்றறிந்த சமூகமும் ஆழமாக கரிசனை கொள்ள
வேண்டும்.

யுத்தம் தின்ற தாய்மண்ணை போதை,  மது,  கலாசார சீரழிவு எனும் அரக்கர்கள் கபளீகரம் செய்வதை எதுவரை எமது சமூகம் பொறுமையாக கையாளப்போகின்றது?

வெளிப்படையாகவே போதை சார் ஒழுக்க விழுமியங்களிற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு, அதில் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் இருந்தமைக்காக ஒரு பீடாதிபதி மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை பாரதூரமான,  எமது சமூகத்தின் ஒழுக்க நெறியை கேள்விகுறியாக்கும்இ நன்னடத்தைசார் விழுமியங்களிற்கு
தமிழ் சமூகத்தின் அறிவுப்புலத்தில் விடுக்கப்பட்ட பாரிய சவாலாகும்.

கடந்த 15ஆண்டுகளில் போதையின் பிடியில் சிக்கி தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறை,  குறிப்பாக மாணவ சமூகம் படும் அவலம் வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. பல பெற்றோர் நடைபிணங்களாக வாழ்கின்றனர். தினம் தினம் விபத்துக்களும் தற்கொலைகளும் இளவயது நெறிபிறழ்வுகளும் கல்வியிலிருந்து இடைவிலகல்களும் எம் தாய்மண்ணில் போதை எனும் அரக்கனால் மலிந்துவிட்ட நிலை கண்டு சமூக,  தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மனதினுள் அழுத வண்ணமே உள்ளனர்.

இந்த நிலையில் போதைக்கெதிராக பல்கலைக்கழகத்தில் பலமான குரல்கள் எழுந்திருப்பது கற்றறிந்த தமிழ் தேசியத்திலும் சமூகசிந்தையிலும் ஆழமாக ஊறிய சமூகத்தின் மாற்றத்திற்கான திறவுகோலான ஊடகபின்புலத்திலிருந்து வந்த பேராசிரியர் ஒருவரின் செயலினூடாக வெளிப்பட்டு இருப்பது அவருக்கு
பின்னால் யாழ் பல்கலையின் மிகப்பெரும் மாணவ சக்தியான கலைப்பீட மாணவர் ஓன்றியம் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது தமிழ் சமூகத்திற்கு ஆறுதல் அளிக்கும் நல் அறிகுறியாகும்.

மாற்றத்தை,  தூய்மையாக்கலை பற்றி பேசுகின்ற இந்த தருணத்தில் தமிழ் சமூகம் தன்னை பீடித்துள்ள பீடைகளை களைந்து, புதிய போதையற்ற தேசம் நோக்கிய பாதையை ஆரம்பிக்கட்டும். அதற்கு அனைவரும் ஒன்றாக கரங்களை கலைப்பீடத்துடன் இணைத்திடுவோம். நல்ல சிந்தனையுள்ள அனைவரும் தமிழ் தேசிய ஆன்மாவை தேசத்தினை இருப்பை பாதுகாக்க அணி திரண்டு ஆதரவை
வெளிப்படுத்துவோம் – என்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments