Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைIMF இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு

IMF இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்இ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர்
அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் வரிக் கொள்கைஇ வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும்
பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட
முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான
கொள்கை முயற்சிகளை வலியுறுத்திஇ அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிர்வாக இயக்குனர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திராவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments