Wednesday, July 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇந்தோனேசிய தூதுவர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு.

இந்தோனேசிய தூதுவர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும்
அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய இச்சந்திப்பின் போது,  வர்த்தகம்,  சுற்றுலா,  தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

சமய சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலாப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும்
இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் விவசாயத் துறைக்கு
ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும்,  குறிப்பாக பனை எண்ணெய் இறக்குமதி மற்றும் சேதன உரங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் தூதுவர் பிரதமருடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் பொதுப் போக்குவரத்து முறைமையில் மின்சார
வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன்இ தகவல்
தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்தோனேசிய தூதுக்குழுவின் பிரதிநிதியாக துணை தூதுவர் ஃபிக்கி ஒக்டானியோன்ட் மற்றும் அமைச்சு ஆலோசகர் லைலால் கே. யுனியார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments