எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள
09 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இன்று வியாழக்கிழமை (2) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இவ் வேட்புமனுத்தாக்கல்
செய்யப்பட்டது.

